Recent Comments

    உள்ளத்தை சுவடிய சுவடி!

    நீக்கமற நிறைந்த வெளியீடுகள் இத்தனை வெளிவந்தும், ஒரே ஒரு தாளில் வெளிவந்த சுவடி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெறுமனே துண்டுப்பிரசுரம் வெளியிட்டு, எமது அச்சுக் கலையகத்திற்கு விளம்பரம் செய்வதை விட, செய்திமடலாய் வெளியிடுவது அனைவரையும் வாசிக்க வைக்கும், எங்கள் அச்சுச் சேவைகளுக்கு விளம்பரமாய் அமையும் என்ற எங்கள் எதிர்ப்பார்ப்பு வெற்றியடைந்திருக்கிறது. கருத்துக்கள், அரசியல் என்று எழுதி அல்லல்படாமல், பயனுள்ள தகவல்களைத் திரட்டித் தருவது மட்டுமே எங்கள் நோக்கம். தமிழில் எதை எழுதினாலும், எங்கேயோ இடிக்கும். பூசணிக்காய்க்குப் பதிலாய் குஷ்பு படம் போட்டாலும்! நல்ல காலம் நாங்கள் புத்திஜீவிகளுக்கு எழுதப் போகவில்லை. மனம் புண்பட்ட குஷ்புவின் மாஜி ரசிகர்கள் வெறும் குறைப்படுதலோடு மட்டும் நிறுத்திக் கொண்டார்கள். எனவே இம்முறை நமிதா ரசிகர்களோடு ஒரு சில்மிஷம். மற்றவர்களுக்குப் பயன்படக் கூடிய விடயங்களை அனுப்புங்கள். எல்லோரும் வாசிக்கக் கூடியதாய் சுவாரஷ்யமாய் எழுதுவோம். அச்சுவேலைகள் என்றதும் எங்கள் பெயர் உங்கள் மனதில் இருக்கட்டும். அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்!

    Postad



    You must be logged in to post a comment Login