Recent Comments

    இனிப்பான சீனி பற்றி… ஒரு கசப்பான சேதி!

    இனிப்புப் பிரியர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி ஒன்றை உலக உடல்நல அமையம் வெளியிட்டிருக்கிறது.தினசரி உட்கொள்ளும் சீனியின் அளவை ஆறு தேக்கரண்டிகளுக்கு குறைவாக்கும்படி! இது ஒரு கொக்கோ கோலாப் பேணிக்குள் உள்ள சீனியின் அளவை விடக் குறைவாகும்.  குழந்தைகளை மூன்று கரண்டி மட்டுமே உண்ணும்படி உலக உடல்நல அமையம் மேலும் கூறுகிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு சீனியின் அளவைக் குறைப்பது அவசியம். உடல் பருமனடைதல், பல் நோய், நீரிழிவு நோய், இருதய நோய், புற்றுநோய் என பல நோய்களுக்கு சீனி முக்கிய காரணியாகிறது. கனடியர்கள் (தமிழ்க் கனடியர்கள் உட்பட!) தினசரி 26 தேக்கரண்டி சீனி உட்கொள்கிறார்கள். அப்பாடா! நல்ல காலம், நான் ஒரு நாளைக்கு மூன்று தடவை, இரண்டு கரண்டி சீனியோடு தான் தேனீர் குடிக்கிறேன் என்று தப்பித்ததாய் மெச்சிக் கொள்ளாதீர்கள். இந்த ஆறு கரண்டிக் கணக்கு வெறும் தேநீர்க் கோப்பைக்குள் சீனியாக மட்டும் அல்ல! குடிக்கும் ஜுஸ்கள், கடிக்கும் பழங்கள், தித்திக்கும் தேன், சுவைக்கும் இனிப்புகள் என பலவற்றையும் சேர்த்துத் தான்! சீனி நிறைந்த பானங்களால் வயிறு நிறைந்து, சத்துணவை உண்ணும் விருப்பு குறைந்து விடுகிறது. அட, இந்தச் செய்தி என்ன கசப்பாய் இருக்கிறதா? மருந்து கசக்கத் தான் செய்யும்! (உண்மையைப் போல!) கொஞ்சமாய் சீனி தடவிச் சாப்பிடுங்கள்!

    Postad



    You must be logged in to post a comment Login